கண்டி நகரில் காச நோயாளர்கள் அதிகரிப்பு

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை கண்டி நகரில் 50 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டியின் பிரதான மாநகர வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.கண்டி நகர எல்லையினுள் முக்கிய தொற்று நோய் அச்சுறுத்தல் டெங்கு அல்ல காசநோய் என்றும் அவர் கூறினார்.டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு 06 நாட்களுக்குள் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டாலும் 06 மாதங்கள் ஆனாலும் காசநோயாளிகளை இனங்காண முடியாது என கண்டி பிரதான மாநகர வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்தார்.

தொடர்ந்து இருமல், சளி, பசியின்மை, உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் குறுகிய கால சிகிச்சையைப் பெறுவதன் மூலம் நேரடியாக காசநோய்க்கு சிகிச்சை பெற முடியாது எனவும் இந்நோய் மேலும் பரவ வாய்ப்புள்ளதாக வைத்தியர் ஜெயசிங்க மேலும் தெரிவித்தார்.
கண்டி நகரைச் சுற்றி காசநோய் நிலைமை அதிகமாக காணப்படுவதால், மக்கள் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க விழிப்புடன் இருக்க வேண்டுமென கண்டி பிரதான மாநகர வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here