குளவி தாக்குதலுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்திற்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான 10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.4 சிறுவர்களும், 6 சிறுமிகளும் மற்றும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் செல்லக்கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here