ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரை காணவில்லை?

ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என ஜனநாயகம், மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் முன்னிலையான நிலையில், அவர்களில் ஒருவர் சமீபத்தில் காலமானார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மஞ்சுள கஜநாயக்க,
“இறந்தவரின் மாற்று இன்னும் பெயரிடப்படவில்லை.பெயரிடாததில் சில பலவீனங்களை நான் காண்கிறேன்.இந்த 38 பேரில் 15 பேர் மட்டுமே குறைந்தது 10 பேரையாவது கூட்டி கூட்டம் நடத்தியுள்ளனர்.

நான் மிகவும் பொறுப்புடன் இந்த கருத்தை வெளியிடுகிறேன்.பாக்கெட் மீட்டிங் என்ற கூட்டத்தையேனும் 15 பேர் மாத்திரமே ஏற்பாடு செய்திருந்தனர்.மற்றைய 24 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.இன்னும் 23 உள்ளனர். அந்த 23 பேரில் 03 பேரைக் காணவில்லை.தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்தால், அந்த 03 இல் இரண்டு பேரின் இலக்கங்களுக்கு வேறு தரப்பினரே பதில் வழங்குகின்றனர்.மற்றைய நபர் தொலைபேசி அழைப்பை துண்டிக்கிறார்.

அந்த 23 பேரில் 05 பேருக்கு சமூக ஊடகங்களின் கீழ் பேஸ்புக் கணக்கு கூட இல்லை.மற்றைய 23 பேரிடம் திரும்பிச் சென்றால், அவர்களில் 3 பேரும் ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று வேட்பு மனுவில் கையெழுத்திட்டிருப்பதைக் காணலாம்.கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அதைத்தவிர எங்கும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று குறைந்தது மூன்று பேர் ஊடகங்களுக்குச் சொல்லவில்லை.மற்றைய விடயம் என்னவென்றால், இந்த 39 பேரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எங்கள் இணையதளத்தில் பதிவேற்ற விரும்பினோம்.அங்கும் அவர்களின் தொடர்பு மூலம் புகைப்படம் கூட பெற முடியவில்லை.15 பேரைத் தவிர, மற்றைய 24 பேர் தகவல் தொடர்புக்கு கூட அணுகுவதில்லை” என்றார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here