அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பை இலக்கு வைத்து அண்மையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அந்நாட்டுக் காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இதன்படி குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் வெளிநாட்டுச் சதிகள் எதுவும் இல்லை எனவும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய தோமஸ் க்ரூக்ஸ் என்பவர் தனித்துச் செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.துப்பாக்கிதாரியான தோமஸ் க்ரூக்ஸ் துப்பாக்கிச் சூட்டின் போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.