தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த மகிழுந்து , உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக சென்றுகொண்டிருந்த போது, வென்னப்பு பகுதியில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பாக, வாகனத்தை செலுத்தி சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.