ரஷ்யாவின் தலைசிறந்த உளவாளி வெள்ளை திமிங்கலம் திடீரென உயிரிழப்பு.

ரஷ்யாவின் உளவாளி என்று அழைக்கப்படும் ஹவால்டிமிர் வெள்ளை இன திமிங்கிலம் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி உயிரிழந்தது என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. மீனவர்களுடன் மிகவும் நட்பாகப் பழகும் இந்த திமிங்கலம் திடீரென உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.ரஷ்யா பொதுவாகவே எல்லை கடந்து உளவு பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறது. சில நேரங்களில் இப்படி உளவு பார்க்கும் போது அது வசமாக மாட்டிக் கொள்ளவும் செய்யும்.

அப்படி தான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நார்வே அருகே ரஷ்யா உளவு பார்க்க அனுப்பிய திமிங்கலம் ஒன்று சிக்கியது. அதாவது, கடந்த 2019ம் ஆண்டு உலகெங்கும் பேசுபொருளான பெலுகா வகை திமிங்கலம் தான் ஹவால்டிமிர். 14-அடி நீளமும் 1224 கிலோ எடையும் கொண்ட இந்த திமிங்கலத்தை பலரும் ரஷ்யாவின் உளவாளி என்றே அழைக்கிறார்கள்.

மீனவர்களுடன் எப்போதும் நட்பாகப் பழகும் இந்த சுறா திடீரென இப்போது உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த திமிங்கலம் எப்படி உயிரிழந்தது. அதற்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் இப்போது வரை தெளிவாக இல்லை. இது தொடர்பாக விசாரணை வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.கடந்த 2019ல் இந்த திமிங்கிலம் கடலில் மீனவர்கள் அதிகம் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளது. கடலில் திமிங்கலத்தை பார்த்தால் அது உளவாளியா என நீங்கள் கேட்கலாம். ஆனால், விஷயம் என்னவென்றால் அந்த திமிங்கலத்தில் கேமரா உடன் கூடிய சில கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த கருவிகளில் ரஷ்யாவில் உள்ள St செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சிட்டி என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாகவே அந்த திமங்கிலம் ரஷ்ய உளவாளியாக இருக்கலாம் என்று பலரும் பேச தொடங்கினர்.

அதேநேரம் அந்த திமிங்கலம் உளவாளி தானா என்பது யாருக்கும் தெரியாது. எதிர்பாராத விதமாக அந்த திமிங்கலத்தின் உடலில் இந்த கருவிகள் சிக்கி இருக்கலாம் என்றும் சிலர் கூறினர். ஆனால், எதிர்பாராத விதமாக இதுபோல வேறு நாடுகளுக்குக் கருவிகள் சென்றால் அது குறித்துச் சம்மந்தப்பட்ட நாடு விளக்கமளிக்கும் அல்லது உரிமை கோரும். அதாவது இந்தியா ராக்கெட் சமீபத்தில் எதிர்பாராத விதமாகப் பாகிஸ்தான் சென்றது. அது குறித்து உடனே இந்தியா விளக்கமளித்தது. ஆனால், ரஷ்ய சிட்டி பொறிக்கப்பட்டு இருந்தாலும் ரஷ்யா ராணுவம் அதை உரிமை கோரவே இல்லை.

இதுவே சந்தேகத்தை அதிகரித்தது. மேலும்,பொதுவாக இந்த பெலுகா வகை திமிங்கலங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாத கடற்கரைகளில் உள்ள குளிர்ச்சியான ஆர்டிக் நீரில் வசிக்கும். இவை மனிதர்களை கண்டாலே தெரித்து ஓடும். ஆனால், இந்த பெலுகா திமிங்கலம் மனிதர்களுடன் மிகச் சகஜமாகவே இருந்தது. ஏதோ சிறு வயதில் இருந்தே மனிதர்கள் கூட இருந்தது பேலவே மீனவர்களுடன் நெருக்கமாக இந்தது. ரஷ்ய உளவாளி என சொல்ல இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

உலகெங்கும் இந்த பேச்சு அதிகரித்த நிலையில், நார்வே அரசு இது குறித்த எச்சரிக்கையைக் கூட வெளியிட்டது. அதாவது ஒஸ்லோவிற்கு அருகில் உள்ள ஃப்ஜோர்டில் காணப்படும் இந்த பெலுகா திமிங்கலத்துடன் எந்தவொரு தொடர்பையும் வைத்திருக்கக்கூடாது என்று அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here