ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கணக்கெடுப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிரத்தியேக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தப்படும் பல்வேறு கணக்கெடுப்புகள் குறித்து விசாரணை நடத்தி உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இவ்வாறான கணக்கெடுப்புகளுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தேர்தல்கால கருத்துக்கணிப்பு என்பது பெரும்பாலான சமயங்களில் அரசியல் கட்சிகளாலும் அமைப்புகளாலும் திட்டமிட்டு செய்யப்படுகின்றன. அதற்காக பெருமளவு நிதியும் செலவிடப்படுகிறது.

தங்களின் கட்சிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக மக்கள் மத்தியில் பிம்பத்தை உருவாக்கும் வகையில் இவை செய்யப்படுகின்றன. தேர்தல்களின்போது வாக்காளர்களின் மனநிலை என்னவென்பது குறித்தும் முக்கிய பிரச்சினைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்வது உலகம் முழுவதுமே உள்ள நடைமுறைதான்.வெளிநாடுகளில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் போல இங்கு செய்யப்படுவதில்லை. வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை ‘Exit poll’ என்று அழைக்கின்றனர். Exit என்றால் ‘வெளியேறுதல்’ என்று பொருள். அந்த வார்த்தையே இந்தக் கருத்துக்கணிப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதைக் கூறிவிடுகிறது.ஒரு வாக்காளர் தேர்தலில் வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு நிலையத்திலிருந்து வெளியே வரும்போது அவர்களிடம் எந்தக் கட்சி அல்லது எந்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார் என்பதைக் கேட்பார்கள். அவர்கள் சொல்ல விரும்பும் பட்சத்தில் அவரின் கருத்து பதிவுசெய்யப்படும். இதனைத்தான் கருத்துக்கணிப்பு என்று அழைக்கிறோம்.

கருத்துக்கணிப்பு நடத்தும் அமைப்புகள் தங்கள் ஊழியர்களை வாக்குச் சாவடிக்கு வெளியே நிற்கவைக்கின்றன. இவர்கள் வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் ‘‘யாருக்கு வாக்களித்தீர்கள்?’’ என்று கேட்பார்கள்.மேலும், ‘‘உங்களுக்கு பிடித்த வேட்பாளர் யார்?’’ ‘‘ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் தலைவர்களில் யாரைப் பிடிக்கும்?’’ என்பது போன்ற கேள்விகளையும் கூட கேட்பார்கள்.இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10 வாக்காளருக்கு ஒருவர் என்ற முறையில் அல்லது பெரிய தொகுதியாக இருந்தால் 20 வாக்காளருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்பு நடத்தப்படும்.இந்தக் கருத்துகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் தேர்தல் முடிவுகள் எப்படி அமையுமென்று கணிக்கப்படும். ஆனால், இலங்கையில் அப்படியான நடைமுறை இல்லை.தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் இங்கு வியாபாரமாகியுள்ளன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here