தென்கொரிய வேலைவாய்ப்பு -மற்றுமொரு குழு புறப்பட்டது

தென்கொரியாவில் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பைப் பெற்ற 107 பேர் நேற்று (03) தென்கொரியாவுக்குச் சென்றதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தென் கொரிய மனித வள அபிவிருத்தி நிறுவகத்திற்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி, இந்தக் குழுவினர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புறப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.2024 ஜனவரி முதல் தற்போது வரையான 8 மாதங்களில் 83 யுவதிகள் உட்பட 4,368 இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.தென்கொரியாவில் நேற்று (03) உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பைப் பெற்றுச்சென்ற 878ஆவது குழுவில் 03 யுவதிகளும் அடங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் முதன்முறையாக தென் கொரியாவில் பணிபுரிய 3,899 இலங்கையர்கள் இந்த ஆண்டு சென்றுள்ளனர். மேலும் 469 இலங்கையர்கள் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக கொரியாவில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளனர்.
அவர்களில் உற்பத்தித் துறையில் வேலைக்காக 3,630 பேரும், மீன்பிடித் துறையில் வேலைக்காக 623 பேரும், கட்டுமானத் துறையில் வேலைக்குச் சென்ற 8 பேரும் அடங்குவர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here