பாண் ஒரு இறாத்தலின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பாணின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.மேலும், பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கோதுமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவால் குறைக்க பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்து நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.