மன்னாரில் மருந்து கொள்வனவில் உள்ள ஊழலை தடுப்போம் என்று கோரி வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மருந்து கொள்வனவில் உள்ள ஊழலை தடுப்போம் என்று கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் கடந்த செவ்வாய் கிழமை (03) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ‘நியாயமான குரல்களை நசுக்காதே’ ‘தொழிற்சங்க உரிமைகளை நசுக்காதே’ ‘ மருந்து கொள்வனவில் உள்ள ஊழலை தடுப்போம்’ போன்ற வாசகங்களை ஏந்தியவாறு வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வைத்தியர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு,நாடு பூராகவும் வைத்தியசாலைகளில் நோயாளிகள் தகுந்த முறையில் மருந்து வகைகளை பெற முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

நோளார்களுக்கு மருந்து வகைகளை வெளியில் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கும்போது வைத்தியர்களாகிய எங்களை பொது மக்கள் திட்டும் நிலைக்கு நாங்கள் உள்ளாகி வருகின்றோம்.அரசானது வைத்தியசாலைகளுக்கு சரியான முறையில் மருந்து வகைகளை வழங்காமையால் நாங்கள் நோயாளர்களுக்கு தகுந்த பதில் அளிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.இதனால் வைத்தியர்களாகிய நாங்கள் உண்மை நிலையை எடுத்தியம்பும் முகமாக கவனயீர்ப்பு போரட்டத்தை ) நடாத்துகின்றோம் என்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here