கெஹேலியவின் மகனுக்குச் சொந்தமான இரு அதிசொகுசு வீடுகளை முடக்கியது நீதிமன்றம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் மகனும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு அதிசொகுசு வீடுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது.இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்னவினால் இந்த உத்தரவு இன்று வியாழக்கிழமை (19) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 80 மில்லியன் மற்றும் 65 மில்லியன் ரூபாய்களுக்கு இரண்டு அதிசொகுசு வீடுகளை வாங்கியுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணைகள் முடிவடையும் வரை இந்த 2 அதிசொகுசு வீடுகளையும் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனையடுத்து, இந்த கோரிக்கைக்கு இணங்க, எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை இந்த இரண்டு அதிசொகுசு வீடுகளையும் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here