மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றிலிருந்து ஆடு திருடிச் சென்ற இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.தமது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடொன்று களவாடப்பட்டுள்ளதாக ஆட்டின் உரிமையாளர் வெள்ளிக்கிழமை (15) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.இந்நிலையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார், மூளாய் தண்ணீர் தொட்டியடி பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 38 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை நேற்று கைது செய்தனர்.அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.