பல்வேறு பிரதேசங்களில் உள்ள விற்பனை நிலையங்களில் இருந்து திருடப்பட்ட சவர்க்காரங்களுடன் சந்தேக நபரொருவர் கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியான சவர்க்காரங்களே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 48 வயதுடையவர் ஆவார்.சந்தேக நபர், திருடிய சவர்க்காரங்களை குருணாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் உள்ள லொறியில் மறைத்து வைத்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல்வேறு பிரதேசங்களில் உள்ள விற்பனை நிலையங்களில் இருந்து சவர்க்காரங்களை திருடி அதனை ஏனைய நபர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.