இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவிலகண்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சாவகச்சேரி பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மணல் அகழ்வுக்குப் பயன்படுத்திய உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது.
சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.