ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று(28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெறவுள்ள மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி , ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்ளின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.