பேக்கரியின் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

பேக்கரியின் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை நாளை (26) வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சங்கத்தின் தலைவர் என்.கே. பாண் விலையை குறைப்பது தொடர்பில் நேற்று (24) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் எனினும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். பேக்கரி உரிமையாளர்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ரொட்டிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்த கருத்துக்கு அமைய விலை குறைப்பு குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. இதனால் ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை குறைப்பது குறித்து பேக்கரி உரிமையாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.எவ்வாறாயினும், ரொட்டி விலை குறைக்கப்படுமா என்பது குறித்து நாளை (26) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here