எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய சூத்திரம் முந்தைய 3% கொடுப்பனவை விட அதிக கொடுப்பனவையே வழங்கும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.அதன்படி, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3% கொடுப்பனவை இரத்து செய்வதற்கும், புதிய சூத்திரம் மூலம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அண்மையில் தீர்மானித்தது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் நேற்று (28) முதல் எரிபொருளை முன்பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்கு முடிவு செய்துள்ளதாகக் கூறியது. இருப்பினும், இந்த முடிவு நாட்டில் எந்த எரிபொருள் நெருக்கடியையும் ஏற்படுத்தாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விநியோகஸ்தர்கள் பெறும் கொடுப்பனவை அதிகரிக்கும் அதன் தலைவர் ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“முதல் 15 லோடிங்கிற்கு 6.96 ரூபா கொடுக்கப்படும். அடுத்த 15 லோடிங்கிற்கு 6.62 ரூபாய வழங்கப்படும். இப்போது சுமார் 25 லோடிங்களை செய்பவர்கள் அதிகம் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் தற்போது சுமார் 1 மில்லியன் ரூபாய் வருமானம் பெறுகின்றனர். அதில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்த பிறகு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.”
“நாம் அறிமுகப்படுத்தும் முறைமையின் ஊடாக , 25 லோடிங் செய்பவர்களுக்கு 6.69 ரூபா கிடைக்கும். “அப்போது அவர்களுக்கு 113,850 கிடைக்கும்.” பழைய முறையை விட அதிகளவான வருமானமே இதில் கிடைக்கிறது” என்றார்.