கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 53வது “சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024” போட்டி நிகழ்ச்சியில் நித்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் முஹம்மட் ஹரிஸ் முஹம்மட் ஹின்சான், நிஹால் அஹமட் சிப்னி அஹமட் ஆகியோர் ஓட்டப்பந்தயம் நிகழ்ச்சியில் பங்குபற்றி முறையே வெண்கலப்பதக்கம், திறமைச் சன்றிதழைப் பெற்றிருந்தனர்.இதனை பாராட்டி கெளரவிக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் றிஷாட் பதியுடீன் அவர்களின் அம்பாறை விஜயத்தின் போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் அழைப்பின்பேரில் இம்மாணவர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்று நேற்று (01) நிந்தவூரில் இடம்பெற்றிருந்தது.இதன்போது இவர்களை பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்று வழிநடாத்திய உடற்கல்வி ஆசிரியர் ஏ. ஹலீம் அஹ்மத் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்து ஒத்துழைப்பு வழங்கும் பெற்றோர்களுக்கும், நிந்தவூர் மண் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.