ஆன்-லைனில் பிரபலமாவதற்கு அவரது நகைச்சுவை அம்சம் முக்கிய காரணமாக உள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து 68 வயது முதியவர் ஒருவர் ரூ. 44 லட்சம் சம்பாதித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.எடி ரிச் என்ற அந்த முதியவர் 1995-ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டு கொண்டதற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடிக்க தொடங்கினார். பின்னர் கிறிஸ்துமஸ் காலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்து ஆன்-லைனில் பிரபலமாகி லட்சக்கணக்கில் பணம் ஈட்டினார். இவருக்கு அவரது மகன் கிறிஸ் உதவி செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் சேர்ந்து இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 44 லட்சம் வருமானம் ஈட்டி உள்ளனர். ஆரம்பத்தில் உள்ளூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடித்து வந்த அவர், தற்போது ஆன்-லைனில் பிரபலமாவதற்கு அவரது நகைச்சுவை அம்சம் முக்கிய காரணமாக உள்ளது.ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் மக்களை சிரிக்க வைப்பதை பெருமையாக கருதுகிறார். அவர் கூறுகையில், நான் மக்களை கவனித்து கொள்ள விரும்புகிறேன். என்னால் முடிந்தவரை அவர்களுக்கு திருப்பித்தர விரும்புகிறேன் என்றார்.