நுவரெலியா சாந்திபுரம் உப தபால் நிலையத்தில் பணிபுரியும் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன் எனும் நபர் இன்றைய தினம் காலை தபால் நிலையத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த வேலை மரணம் அடைந்துள்ளார்.குறித்த நபர் தபால் நிலையத்தில் 14 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார்.அதேபோல் இன்றைய தினம் வேலைக்கு வருகை தந்து அனைவரிடமும் பேசிவிட்டு மேசையில் சாய்ந்திருந்த வேளையில் இவ்வாறு உயிரிழந்து உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை பிரேத பரிசோதனையின் பின் முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.