மத்திய பிரதேசத்தில் படிக்காமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டித்த தாயை மகன் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களிடையே செல்போன் பழக்கத்துக்கு அடிமையாகும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், அதனால் ஒரு சோக சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் பால்கட் மாவட்டத்தை சேர்ந்தவர் கிஷோர் காட்ரே. இவரக்கு ப்ரதீபா காட்ரே என்ற மனைவியும், சத்யம் காட்ரே என்ற மகனும் உள்ளனர்,சத்யம் காட்ரே கடந்த சில காலமாக நீட் நுழைவுத்தேர்வுக்காக கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் படிக்காமல் அடிக்கடி செல்போனையே பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் அவரது தாயார் ப்ரதீபா அவரை கண்டித்த நிலையில், ஆத்திரமடைந்த சத்யம், தனது தாயை தாக்கியுள்ளார். இதில் தலையில் அடிப்பட்டு ப்ரதீபா பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சத்யமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.