Friday, March 14, 2025
Homeஇலங்கைமோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கொலையில் முடிந்த வாக்குவாதம்

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கொலையில் முடிந்த வாக்குவாதம்

உறவினர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, 63 வயதுடைய நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் வரகாபொல எத்னாவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.நேற்று (08) இரவு மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தன.இதன்போது ஏற்பட்ட வாய்த்தகராறு தீவிரமடைந்து, சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவரான 42 வயது மகன், மற்றொரு சைக்கிள் ஓட்டுநரான 63 வயது மாமாவைத் தாக்கி தள்ளிவிட்டுள்ளார்.
இதன்போது, குறித்த நபர் தரையில் விழுந்துள்ளதாகவும், அவர் விழுந்த இடத்தில் இரத்தக்கறை காணப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த நபர் தள்ளப்பட்டபோது அவரது தலை கொங்றீட் தூண் ஒன்றில் மோதியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.பின்னர் அந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.பின்னர், சம்பவ இடத்திற்கு வருகைதந்த வரகாபொல நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் லுஷாகா குமாரி தர்மகீர்த்தி, சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தி, வரகாபொல ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள உடலை, பிரேத பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வரகாபொல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.42 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர், மேலும் வரகாபொல பொலிஸர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  பேருந்தில் கசிப்பினை எடுத்துவந்த சந்தேகநபர் சாவகச்சேரியில் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!