Saturday, April 19, 2025
Homeஉலகம்சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்துவரப்படும் திகதியை அறிவித்தது நாசா

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்துவரப்படும் திகதியை அறிவித்தது நாசா

நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறார். விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்போர் ஆகிய இருவரும் ஆய்வுக்காகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர்.போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்றநிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தற்போது வரை உள்ளனர்.
அவர்களது பயணம், தற்போது 9 மாதங்களை எட்டியுள்ளநிலையில் அவர்களைப் பூமிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இருவரும் விரைவில் பூமிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 16ஆம் திகதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - துப்பாக்கிதாரியின் காதலி விடுதலை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!