மக்கள் பேரவை இயக்கத்தின் எற்பாட்டில் மருத்துகள், அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரியை நீக்க கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நிறுத்தக்கோரியும் இன்று கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது
இதில் மக்கள் பேரவை இயக்கத்தின் உறுப்பினர்களான வசந்த முதலிகே, ராஜ்குமார் ரஜீவ்காந், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசன், பௌத்த தேரர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர்கள், மக்கள் பேரவை இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.சுமார் இருநுறுக்கும் மேற்பட்டோர் இன்றையதினம் கையெழுத்திட்டனர்.