Sunday, March 16, 2025
Homeஇலங்கைகச்சத்தீவில் தங்க சங்கிலி அறுத்த பெண்ணுக்கு விளக்கமறியல்

கச்சத்தீவில் தங்க சங்கிலி அறுத்த பெண்ணுக்கு விளக்கமறியல்

புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் (13) மாலை புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தின் திருச்சிலுவை பவணியின் பொழுது திடீரென பெண்ணொருவர் பவணியில் இருந்த பெண்ணொருவரின் நான்கு அரை பவுண் தங்க சங்கிலியை அறுத்துள்ளார். உடனடியாகவே கடமையில் இருந்த பொலிஸார் குறித்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்து சங்கிலியை கைப்பற்றியுள்ளனர்.இதேவேளை, சந்தேகநபர் தனது முகவரி தொடர்பாக மூன்று இடங்களை பொலிஸாருக்கு கூறிய நிலையில், கச்சத்தீவுக்கு வருகை தந்த நீதவான், சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். மேலதிக குற்ற சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!