காதல் உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து, காதலனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காதலி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் நேற்று (18) வென்னப்புவ, வைக்கால பகுதியில் பதிவாகியுள்ளது.காதலியின் வீட்டிற்குள் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.விமல்கா துஷாங்கி சில்வா என்ற 20 வயதான இளம் பெண்ணே இந்த கத்திக்குத்தில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.