இன்றைய ராசிபலன் 19.03.2025, குரோதி வருடம் பங்குனி மாதம் 5, புதன் கிழமை, சந்திரன் துலாம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் ரேவதி, அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழிலில் கண்ணியத்தைக் காண்பீர்கள். இதன் காரணமாக உங்கள் இனிமையான வார்த்தைகளால் உங்கள் மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களின் அன்பை பெறுவீர்கள். உங்கள் பணியிடத்தில் சில மாற்றங்களைச் செய்ய நன்மை பயக்கும். புதிய சொத்து வாங்கும் ஆசை தள்ளிப்போடப்படலாம், அதில் சிறிது தாமதம் ஏற்படலாம். இன்று பிள்ளைகளுடன் பயணம் செல்லத் திட்டமிடுவீர்கள். வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் பணத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். கடன் வாங்குவது, கொடுப்பதைத் தவிர்ப்பது அவசியம். இன்று, திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பிலும், தேர்வு தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் நிதி நிலைமை வலுப்படும் நாள். உங்கள் பணத்தை பங்குச் சந்தை போன்ற முதலீடு விஷயத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் உங்களுக்கு இரட்டிப்பான பலன் கிடைக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களின் ஆலோசனை மூலம் முதலீடு சார்ந்த விஷயத்தில் செய்வதன் மூலம் மட்டுமே உங்களுக்கு நன்மை கிடைக்கும். தொழிலில் லாபம் பெறுவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதங்களால் கவலைப்படுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் விரும்பிய வெற்றியைத் தரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு இன்று சில சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இன்று வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத் துறையில் பணிபுரிபவர்கள் இன்று மதிப்பு, மரியாதை பெறலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஒரு சாதகமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் பணியிடத்தில் சில பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக நீங்கள் கவலைப்படுவீர்கள். வணிக கூட்டாளிகளின் உதவியால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இன்று உங்கள் மனைவியின் முழு ஆதரவையும், துணையும் பெறுவீர்கள். உங்கள் உறவினர்களில் பேச்சால் வருத்தப்படுவீர்கள். இன்று குடும்பத்தில் சில சுப நிகழ்வுகள் குறித்து விவாதம் நடக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல்நலனில் அலட்சியம் காட்ட வேண்டாம். தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெறவும். கடினமான நேரத்தில் உங்களின் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்தவும். உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபட, உணவு விஷயத்தில் கவனமும், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யவும். பணியிடத்தில் வேலை மேம்படும். ஆன்மிக விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஒரு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் சில முக்கிய வேலைகள் ஒதுக்கப்படலாம். இதில் உங்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்குத் தேவைப்படும். இன்று உங்கள் வேலையை முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இன்று வாழ்க்கைத் துணையுடன் ஆன்மிக பயணத்திற்கு செல்லலாம். இன்று உறவினர்களுக்கு பணம் தொடர்பாக உதவ முன் வருவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் பிரச்சினை நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகள் உங்களை ஆதிக்கம் செய்ய நினைப்பார்கள். இருப்பினும் அவர்களை தோற்கடிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். உங்கள் தொழில் வேகம் அடையும். மாணவர்கள் ஆசிரியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கை துணையை மகிழ்ச்சியாக பயணத்திற்கு அழைத்து செல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்த்த நல்ல உதவி கிடைக்கும். இன்று நீங்கள் எதிர்பார்த்த கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மனதளவில் நிம்மதியாக உணர்வீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களை சுற்றி உள்ள சூழல் இனிமையாக இருக்கும். பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். நிதிநிலையில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் வேலை, தொழில் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். கல்வி தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அவசரப்பட்டு எந்த ஒரு முடிவு எடுப்பது, வேலை செய்வதை தவிர்க்கவும். உங்கள் தொழிலில், மனிதன் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் வேண்டாம். இதனால் எதிர்காலத்தில் வருத்த நேரிடும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு உங்களை பெருமைப்படுத்தும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சமூகபணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு பண வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் கல்வி தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். பயணங்கள் அனுகூல பலனை தரும்.