இந்தியாவில் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி பண்டிக்கை வரும் ஏப்ரல் 7 தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக பலரும் விரதம் இருந்து கடவுள் வழிபாடு செய்வது வழக்கம். வட இந்திய மாநிலங்களில் இவ்விழா அதிகளவில் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நிலையில்தான், உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் வசிக்கும் சாயா சர்மா என்ற பெண் , ஆன்லைன் உணவு டெலிவரி ஆப்பில் நவராத்திரி பண்டிகையின்போது வெஜ் பிரியாணி ஆடர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு மாறுதலாக சிக்கன் பிரியாணி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் அதனை போட்டோவாக பகிர்ந்து குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஏப்ரல் 4ம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் சுத்த சைவம். ஆனால், எனக்கு சிக்கன் பிரியாணி கொடுத்துள்ளனர். நான் 2 ஸ்பூன் சாப்பிட்ட பிறகே அதில் இறைச்சி இருந்ததைக் கவனித்தேன். இதை என்னால் ஏற்கவே முடியாது” என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.அங்குள்ள “லக்னவி கபாப் பராத்தா” என்ற உணவகத்தில் இருந்து வெஜ் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும், ஆனால் தனக்கு சிக்கன் பிரியாணி வந்ததாகவும் அந்த பெண் கூறுகிறார். இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் புகாரளிக்கத் தொடர்பு கொண்ட போது, ஹோட்டல் மூடப்பட்டு இருந்ததாகக் குறிப்பிட்டார். அவரது வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆனது.இந்நிலையில், உத்தரப் பிரதேச போலீசார் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளனர். இது தொடர்பாக உணவக உரிமையாளர் ராகுல் ராஜ்வன்ஷியை காவல்துறையினர் கைது செய்தனர்.