கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது
அத்துடன் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைவர் மொஹமட் லஃபார் தாஹீர் மற்றும் பிரியந்த பெர்னான்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.