Saturday, April 19, 2025
Homeஇந்தியாராட்சத பலூன் கயிறு அறுந்து 100 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபர் - பதறவைக்கும்...

ராட்சத பலூன் கயிறு அறுந்து 100 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபர் – பதறவைக்கும் வீடியோ

ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தின் 35வது ஆண்டு நிறுவன விழா கடந்த மூன்று நாட்களாக கொண்டாடப்பட்டது.நிறைவு விழாவான நேற்று ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்வு காலை 7 மணியளவில் நடக்க இருந்தது. பலூனை இயக்கும் நிறுவனத்தின் ஊழியர் வாசுதேவ் காத்ரி(40 வயது) பலூனின் ஒரு பக்க கயிற்றை பிடித்தபடி தரையில் நின்றுகொண்டிருந்தார்.அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ராச்சத பலூன் வான் நோக்கி பறக்க தொடங்கியது. இதில் கயிற்றுடன் அவர் மேலே சுமார் 100 அடி உயரத்திற்கு காற்றில் இழுத்துச் செல்லப்பட்டார். பின் கயிறு அறுந்து அங்கிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தின்போது அவர் மேலே இழுத்துச்செல்லப்பட்டு கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பலூன் இயக்குவதில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதும் வாசுதேவ் காத்ரியின் எதிர்பாராத மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:  கிளிநொச்சியில் இடம் பெற்ற சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!