தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் கேள்விக்கேற்ற விநியோகம் இல்லாமையின் காரணமாக உள்நாட்டுச் சந்தையில் மலையக மற்றும் தாழ் நிலப் பகுதிகளில் விளையும் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேசத்தில் மரக்கறி மொத்த மற்றும் சில்லறை மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதன்படி, போஞ்சி ஒரு கிலோகிராம் 600 – 700 ரூபாய் வரையிலும். கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 600 ரூபாய், ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 400 ரூபாய், நுவரெலிய உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 600 ரூபாய், ஒரு கிலோகிராம் தக்காளி 800 ரூபாய்க்கும், ஏனைய அனைத்து மரக்கறிகளும் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.தேங்காய் ஒன்றின் விலை 180 ரூபாயிலிருந்து 220 ரூபாய் வரை சில்லறைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு கிலோகிராம் புளி மற்றும் சீனி வாழைப்பழம் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.கடந்த சில தினங்களாக நிலவிய தொடர் மழையின் காரணமாகவும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.