முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை ஸ்திரப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.எதிர்வரும் ரமலான் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை ஸ்திரப்படுத்தவும், கேக் உள்ளிட்ட பேக்கரித் தொழிலுக்குத் தேவையான முட்டைகளை வழங்கவும் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சர்கள் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.2024-03-18 திகதியிட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் இதுவரை 224 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளது.அவற்றில் 95% லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் வலையமைப்பு மூலம் 37/- என்ற மலிவு விலையில் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் 30-04-2024 அன்று முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here