யானையுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றுமோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவம் திருகோணமலை -ஹொரவபொத்தானை பிரதான வீதி, கன்னியா பகுதியில் நேற்றிரவு (14) இடம் பெற்றுள்ளது.குறித்த விபத்தில் வவுனியா பட்டாணி புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் அவரது சக நண்பரான 22வயதான வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை திருகோணமலை பொது வைத்தசாலை பிரேத அறையில் குளிரூட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் சடலத்தை பிரேத அறையில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திருகோணமலை பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.