Saturday, January 4, 2025
Homeஇந்தியாதிருட வந்த இடத்தில் மதுபோதையில் குறட்டை விட்டுத் தூங்கிய இளைஞர் கைது

திருட வந்த இடத்தில் மதுபோதையில் குறட்டை விட்டுத் தூங்கிய இளைஞர் கைது

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில், ‘கிரீன் டிரெண்ட்ஸ்’ என்ற பிரபல தனியார் ‘பியூட்டி பார்லர்’ இயங்கி வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். பின் நேற்று காலை ஊழியர்கள் கடையை திறந்துள்ளனர். அப்போது கடையினுள் இருந்த பொருட்கள் மற்றும் லேப்டாப் உடைப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதையடுத்து பியூட்டி பார்லர் மேலாளர் ஜெயகுரு, அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோதனை செய்தனர். அப்போது மாடியில் இருந்து ‘குறட்டை’ சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் மாடியில் சென்று பார்த்த போது, மது போதையில் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை தட்டி எழுப்பி விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த கிஷோர் (24) என்பது தெரியவந்தது. நள்ளிரவில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து திருட முயன்றதும், எதுவும் கிடைக்காததால், மதுபோதையில் மாடியில் தூங்கியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், வேறு ஏதாவது கடைகளில் திருடியுள்ளாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments