பலரை சிறையில் அடைத்து மேலும் பொய்களை கூறி அடுத்த 5 வருடங்களை அரசாங்கம் கழிக்க அனுமதிக்கப்போவதில்லை என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசாங்கம் தற்போது திருடர்களைப் பிடிப்பதற்கான சட்டமூலமொன்றை நிறைவேற்றியுள்ளதாகவும், உகண்டாவில் இருப்பதாக அவர்கள் கூறிய பணத்தை கொண்டு வரும் வரை அரசாங்கத்தை நாம் பின்தொடர்ந்து செல்வோம் எனவும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.