கெலிஓயாவில் உள்ள குவாஸி நீதிமன்ற நீதிபதி ஒருவர், 200,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால், அவரது அலுவலகத்தில் வைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கண்டியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் புகாரின் அடிப்படையில் இந்த கைது நடைபெற்றுள்ளது.தொழிலதிபரின் மகனின் விவாகரத்து வழக்கில் தீர்ப்பை விரைவுபடுத்துவதற்காக, குறித்த நீதிபதி லஞ்சம் கோரியதாக தெரியவந்துள்ளது.