Tuesday, April 22, 2025
Homeஇலங்கைஅரசியல் பழிவாங்கல் வேண்டாம் - தாயாரின் விடுதலைக்கு உதவுங்கள்

அரசியல் பழிவாங்கல் வேண்டாம் – தாயாரின் விடுதலைக்கு உதவுங்கள்

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று (21) தனது பேத்தியாரான அருனோதயனாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பை கலந்து கொண்ட இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் தனது தயார் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார்.எமது தாயார் அரசியல் சூழ்ச்சி காரணமாக சிறையில் இருந்ததால் நாம் நான்கு சகோதரர்களும் பாட்டியின் பராமரிப்பில் தற்போது பல அசௌகரியங்களை சந்தித்தி வருகின்றோம்.இதேநேரம் சிறையிலிருக்கும் எமது தாயார் குற்றம் செய்யாது சிறையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மன உழைச்சலுக்கும் உள்ளாகி மருத்துவ வசதி கூட கிடையாத நிலையில் இருக்கின்றார்.இந்த நிலை அவரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.அந்த வகையில் எமது குடும்ப நிலையையும் பிள்ளைகளான எமது நிலையையும் கருத்தில் கொண்டு தாயாரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!