இன்றைய ராசிபலன் 22.04.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 9, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுன ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பண விஷயத்தில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை. கோபத்தைக் கட்டுப்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலையில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். நிலுவையில் உள்ள அரசு வேலைகள் விரைவில் முடியும் வாய்ப்பு உள்ளது. எனவே, முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கவும். வேலை மற்றும் வியாபாரம் சாதகமானதாக இருக்கும்.
ரிஷப ராசி
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பழைய பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும். மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும், ஆதரவும் இருக்கும். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறு சலசலப்பு இருந்தாலும், அமைதி நிலவும்.
மிதுன ராசி
மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். வரவு, செலவு கணக்கை மனதில் வைத்து செயல்படவும். சேமிப்பு இல்லாத சூழலால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரலாம். திட்டமிட்டபடி வேலை செய்யுங்கள். தடைகள் வரலாம். இன்று எந்த முக்கியமான முடிவும் எடுக்க வேண்டாம். வேலையில் கவனம் செலுத்த வேண்டும். பணம் வரவை மனதில் வைத்து செலவுகளைச் செய்வது நல்லது. அரசு வேலையில் தோல்வி, ஏமாற்றத்தை அளிக்கும். இரவில் உடல்நிலையில் கவனம் தேவை.
கடகம் ராசி
கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று பல விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். முதலீடுகளில் ரிஸ்க் எடுக்கலாம். லாபம் கிடைக்கும். நிதி சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். முக்கியமான வேலைகள் செய்து முடிக்க முடியும். நிலுவையில் உள்ள வேலைகளையும் இன்று முடிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம். ஆனால், குடும்ப உறுப்பினர்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் மனதுக்கு நிம்மதி கிடைக்கும். இரவில் நிலைமை சீராகும்.
சிம்ம ராசி
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். சமூகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அது மன அமைதியைத் தரும். எதைப் பற்றியும் குழப்பம் வேண்டாம். எதிரிகள் ஆதிக்கம் செலுத்துவார்கள். உங்கள் எண்ணங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். பழைய நோயால் உடல்நலக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்கள் இன்று ஆன்மீக நடவடிக்கைகளிலும், தியானத்திலும் ஆர்வம் காட்டுவீர்கள் . மன மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு சாதகமான நாள். குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்காக சொந்த செலவுகளைக் குறைத்து பணம் செலவழிப்பீர்கள். ஒழுங்கற்ற உணவு பழக்கத்தால் உடல்நிலை மோசமடையலாம்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். உடல்நிலை சாதகமற்றதாக இருக்கும். யாரையும் அதிகமாக நம்ப வேண்டாம். இல்லையென்றால் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. கவனமாக வண்டி, வாகனம் ஓட்டவும். முடிந்தால் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். நிதி விஷயங்களில் கவனமாக செயல்படவும். குழந்தைகள் குறித்து கவலை ஏற்படும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாலையில் உடல் சோர்வாக இருக்கும். புதிய உடல்நல பிரச்சனைகள் வரலாம்.
விருச்சிக ராசி
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். நிதி பரிவர்த்தனைகள் லாபம் தரும். வேலையில் நிலைமை சாதகமாக இருக்கும். புதிய திட்டத்தில் வேலை செய்ய தொடங்கலாம். வேலை செய்பவர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். உங்களின் தவறுகளால் வருத்தப்பட வேண்டி இருக்கும். சளி மற்றும் இருமல் தொந்தரவு இருக்கலாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாள் . திடீரென்று நல்ல செய்தி கிடைக்கும். ஏதேனும் ஒருவகையில் பணம் வரவு கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று பணம் தொடர்பான விஷயங்களைத் தவிர மற்ற எல்லா வேலைகளிலும் திருப்தி அடைவீர்கள். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். வீட்டில் மரியாதை குறைவாக கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.
மகர ராசி
மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்த நாளாக இருக்கும். காதல் உறவுகள் வலுவடையும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். படிப்பு தொடர்பான விஷயங்களில் சிறப்பாக செயல்பட முடியும். நிதிநிலை தொடர்பாக கவலைப்படுவீர்கள். மாலையில் திடீர் பண வரவு காரணமாக நிம்மதி அடைவீர்கள். இன்று உங்கள் தவறுகளை உணர்ந்து செயல்படவும்.
கும்பம் ராசி
கும்பம் ராசிக்காரர்கள் இன்று வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வேலையில் திருப்தி அடைவீர்கள். கோபம் மற்றும் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காது. மனதில் பொறாமை உணர்வு இருக்கும். யாரும் எளிதில் உதவ மாட்டார்கள். வீட்டில் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், இன்று பொழுதுபோக்கு விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பண முதலீடு செய்வதில் கவனமாக இருங்கள். எதிர்காலத்தில் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
மீனம் ராசி
மீனம் ராசிக்காரர்கள் இன்று தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள் . கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சளி மற்றும் இருமல் தொந்தரவு ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். வேலையில் உள்ள பிரச்னையைப் பற்றி கவலைப்படுவதை விடுத்து முன்னேற்றத்திற்காக செயல்படவும். நாளை முதல் நிலைமை சீராகும். வீடு பராமரிப்பு அல்லது குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை பிரச்னை போன்றவற்றால் பணம் செலவாகும்.