நீர்கொழும்பு, தெஹிமல்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து பெண்கள் உட்பட 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.10 ஆண்களும் 7 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைதுசெய்யப்பட்ட பெண்களில் சிலர் தங்களது கணவர் வேலைக்கு சென்ற பின்னர் அயல் வீட்டவர்களுடன் இணைந்து இந்த சூதாட்ட விடுதியை நடத்தி வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.இதன்போது சூதாட்ட விடுதியிலிருந்து 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த சூதாட்ட விடுதிக்கு வருகை தருபவர்கள் தங்களது நகை, பணம் மற்றும் வாகனங்களை பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பலர் தங்களது நகை, பணம் மற்றும் வாகனங்களை இழந்து ஏமாந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.