தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், பதலிங்கப் பள்ளியை சேர்ந்தவர் சைலு (வயது 45). இவரது மனைவி கவிதா. தம்பதிக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வசித்து வருகின்றனர். சைலு தனது குழந்தைகளுடன் படலிங்க பள்ளியில் தாய் வீட்டில் வசித்து வந்தார். கவிதா நிஜாம் பேட்டையில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.அப்போது கவிதாவுக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டது. மனைவி போதைப் பழக்கத்திற்கு அடிமையானதை சைலு அடிக்கடி கண்டித்து வந்தார். இதனால் கவிதாவுக்கு கணவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. கணவரை தீர்த்து கட்ட கவிதா முடிவு செய்தார்.அதன்படி கடந்த 18-ந் தேதி கணவருக்கு போன் செய்து கவிதா மித்ரா ஹில்சில் உள்ள தனது தங்கை ஜோதி வீட்டிற்கு வரவழைத்தார். மது போதையில் வந்த சைலு மனைவியுடன் சண்டையிட்டார். பின்னர் அங்கேயே படுத்து தூங்கினார்.நள்ளிரவு கவிதா தனது தங்கை ஜோதி மற்றும் அவரது கணவர் மல்லேஷுடன் சேர்ந்து சைலு உடலில் மின்சாரம் பாய்ச்சினார்.பின்னர் ஜோதி சாயின் கால்களை பிடித்துக் கொண்டார். கவிதா கத்தியை எடுத்து வந்து தனது கணவரின் தொண்டையில் வெட்டினார். பின்னர் மர்ம உறுப்பை வெட்டி எறிந்து கொடூரமான முறையில் கொலை செய்தார்.
உடலை தார் பாயில் சுற்றி வனப்பகுதியில் வீசுவதற்காக ஆட்டோவில் எடுத்துச் சென்றனர். ஆட்டோ டிரைவர் சந்தேகம் அடைந்து கேட்டதால் பிணத்தை மீண்டும் தங்கையின் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.மறுநாள் அதிகாலை அதே பகுதியில் உள்ள கட்டிட கழிவுகளை கணவர் பிணத்தின் மீது போட்டு மூடி விட்டு வந்தனர். ஆட்டோ டிரைவர் 3 பேர் மர்மமான பொருளை வனப்பகுதியில் வீசுவதற்கு தனது ஆட்டோவில் கொண்டு வந்ததாக போலீசில் புகார் செய்தார்.போலீசார் கவிதாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தனது தங்கை அவரது கணவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதா, அவரது தங்கை, தங்கையின் கணவர் மல்லேஷ் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.