ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலியானார். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, உள்துறை மந்திரி அமித்ஷா, துணை நிலை ஆளுநர் சம்பவம் நடைபெற்ற பஹல்காமிற்கு செல்கின்றனர்.