சுகயீனம் காரணமாக பாடசாலையில் காலை வேளையில் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத மாணவிகள் சிலரை ஆசிரியை ஒருவர் பாடசாலை நேரம் முடிவடையும் வரை வெயிலில் முழங்காலில் வைத்துள்ளதாக மொரகொட பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.இந்த சம்பவம் அநுராதபுரம் மொரகொட கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிகளே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.இது தொடர்பில் மாணவிகளின் பெற்றோர்கள் சிலர் மொரகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மொரகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.