இன்றைய ராசிபலன் 26.04.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 13, சனிக் கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள மகம், பூரம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டின் சூழலை அமைதியாக வைத்திருக்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். உங்கள் ஆரோக்கியம் மோசம் அடையும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப தேவைகளை நிறைவேற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் நிதி சார்ந்த விஷய கவனம் தேவை. லாபத்தை பெற கடின உழைப்பு தேவை.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பணம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நிற்க செலவிட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் நன்மை தரும். இன்று உங்கள் இலக்குகளை அடைவதில் சில தடைகளால் கவலை ஏற்படும். இன்று உங்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை ஏற்பட வாய்ப்பு உண்டு.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப தகராறுகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பெரியவர்களின் செயல்பாடு திருப்தியை தரும். பணியிடத்திலும், குடும்பத்திலும் மரியாதை அதிகரிக்கும். உங்களின் முக்கியத்துவத்தைப் பிறர் புரிந்து கொள்வார்கள். இன்று ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று எந்த ஒரு சச்சரவுகளிலிருந்து விலகி இருக்கவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தை கவனம் தேவை. உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சிக்கவும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முயற்சிகளில் அலைச்சல் ஏற்படும். இன்று விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நிதிநிலை மோசம் அடைய வாய்ப்பு உண்டு. செலவுகளை தவிர்த்து, சேமிப்பதற்கான முயற்சியில் ஈடுபடவும். பயன் அற்ற விஷயங்களில் உங்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். நீண்ட பயணம் செல்வதை தவிர்க்கவும். வண்டி வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. எதிர்மறையான சூழ்நிலையில் நம்பிக்கையை இழக்காமல் நேர்மறையாக சிந்தித்து செயல்படவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தின் சூழல் நிம்மதியை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளின் செயல்பாடு திருப்தியை தரும். மனதளவில் சோர்வாக உணர்வீர்கள். மூத்த நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று ஆபத்தான வேலைகளில் ஈடுபடுதல், பிறருக்கு ஜாமீன் கையெழுத்து போடுதல் போன்ற விஷயங்களை தவிர்ப்பது அவசியம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலனில் மிகவும் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியம் பேணுதல், உடற்பயிற்சி, உணவு விஷயத்தில் கவனம் தேவை. இன்று எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்ய வாய்ப்பு உண்டு. அதனால் எந்த ஒரு செயலிலும் கவனம் தேவை. மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீதிமன்றம் தொடர்பான விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம், தொழிலதிபர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. இல்லை எனில் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அதனால் குடும்பத்தில் அமைதி குறையும். சிலருக்கு காது வலி, உடல் வலி போன்ற பிரச்சனை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியை பெறுவார்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளவும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பிறவருடன் பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. பெரிய பண பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது வாழ்க்கை துணையுடன் கருது வேறுபாடுகள் ஏற்படும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. கேலி கிண்டலில் ஈடுபட வேண்டாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வாகனம், சொத்து வாங்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு அதில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். இன்று குடும்ப உறுப்பினர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். குழந்தைகளைப் பற்றி கொஞ்சம் கவலை ஏற்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று எல்லா விஷயங்களிலும் நிதானமாகவும், பிறரை அன்பாகவும் கையாள முயற்சி செய்யவும். சில முக்கியமான வேலைகளை செய்து முடிப்பதில் நண்பர்களின் ஆதரவு பெறலாம். இன்று செலவுகளை குறைத்து சேமிப்பதில் ஆர்வம் காட்டவும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். உடல் வலி கவலை மற்றும் அமைதி அற்ற மன நிலை இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீதிமன்ற வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் இருக்கும். இன்று அதிக பணம் செலவிட வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் கருது வேறுபாடுகள் விரைவில் தீரும். வீட்டில் பெரியவர்களின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். இன்று மதிப்பு மிக்க பொருட்கள், ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.