இன்றைய ராசிபலன் 27.04.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 14 ஞாயிற்று கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள சேர்ந்த உத்திரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் லாபகரமாக இருக்கும். செல்வாக்கு மிக்க நபர்களின் அன்பு ஆதரவும் கிடைக்கும். உடல் வலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. ஆபத்தான செயல்களை செய்வது மற்றும் ஜாமீன் கையெழுத்து இடுவதை தவிர்க்கவும். மதிப்புமிக்க பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று விருந்து விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. பயணங்கள் சுவாரசியமானதாக இருக்கும். படிப்பு சார்ந்த பணிகள் வெற்றியைத் தரும். உங்கள் வணிகம் வளரும். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டப்படும். பங்கு சந்தை மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் லாபத்தை பெறலாம். பொறாமை கொண்டவர்களிடம் எச்சரிக்கை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். இந்த நாளில் பெரிய பிரச்சனையிலிருந்து விடுபட வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மதிப்பிற்கு பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். இன்று உங்களிடம் கோபம், உணர்ச்சிவசப்படுதல் அதிகமாக இருக்கும். நண்பர்களிடம் இருந்து சரியான நேரத்தில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு. சமூகத்தில் உறவு அதிகரிக்கும். வண்டி வாகனம் பயன்பாட்டில் கவனம் தேவை.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழல் சிலருக்கு ஏற்படும். ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் பேச்சை கட்டுப்படுத்தவும். பழைய நோய்கள் மீண்டும் பிரச்சினை தர வாய்ப்புள்ளது. இன்று கடினமான செயல்களை பொறுமையாக கையாள்வது நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்குவது தொடர்பான திட்டங்கள் நிறைவேறும். உங்களின் வருமானம் அதிகரிக்க கூடிய நாள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தொடர்பாக நீங்கள் மேற்கொள் முயற்சிகள் வெற்றியை தரும். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் பிரச்சனைகள் தீரும். உங்கள் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலை, தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றியை தரும். வணிக பயணங்கள் எதிர்பாராத லாபங்கள் தரும். சூதாட்டம், பந்தயம், லாட்டரி போன்ற விஷயங்களில் இருந்து விலகி இருக்கவும். இன்று பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வணிகப் பயணங்கள் வெற்றியை தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். காதலில் இணக்கமான சூழல் அதிகரிக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் தைரியம், கௌரவம் அதிகரிக்கும். இன்று செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக லாபகரமான சூழல் நிலவும். வேலையில் உங்கள் பணி பாராட்டப்படும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று மனதளவில் அமைதியற்றதாக உணர்வீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தொலைதூரத்தில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். இன்று உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து சுறுசுறுப்பாக செயல்படவும். உடல் நலம் பலவீனமாக இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம் தொடர்பாக கவலை ஏற்படும். இன்று பிறரின் உணர்வுகளை புண்படுத்த வாய்ப்பு உண்டு. இன்று ஆபத்தான வேலைகளை செய்வது, ஜாமின் கையெழுத்து இடுவதை தவிர்க்கவும். இன்று தூரத்திலிருந்து சில சோகமான செய்திகள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பிறரை அனுசரித்து சொல்ல வேண்டிய நாள். பணியிடத்தில் மாற்றங்கள் செய்ய நினைப்பீர்கள். இதற்கு காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பயம், பதற்றம் ஏற்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஆடம்பரத்திற்காக செலவுகள் செய்வீர்கள். பிறரிடம் சிக்கி உள்ள பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வணிகம் தொடர்பாக லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயம் பதற்றம் உணர்வீர்கள். புதிய சொத்து வாங்கும் திட்டங்கள் முன்னேற்றம் அடையும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வண்டி வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. ஆபத்தான மற்றும் ஜாமின் கையெழுத்து விடுவது தவிர்க்கவும். பழைய நாய்கள் மீண்டும் பிரச்சினை தரும். வருமானத்தில் முன்னேற்றம் இருந்தாலும், செலவுகளை குறைத்து கொள்வது அவசியம். உங்கள் குடும்ப உறவு மேம்படும். ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.