இன்றைய ராசிபலன் 28.04.2025 விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 15, திங்கட் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள சேர்ந்த அஸ்தம், சித்திரை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதில் கவனமாக செயல்படவும். உங்களின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கு முரணாக இருக்கும். பணியிடத்தில் சூழல் சாதகமற்றதாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். பயணம் எதிர்பார்த்த பலனை தராது. மனதில் எதிர்மறை உணர்வு அதிகரிக்கும். இன்று பிறரின் உணர்வுகளைத் தொடர்ந்து செயல்படவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பல நாட்களுக்கு பின்னர் வாழ்க்கைத் துணையுடன் எண்ணங்கள் ஒத்துப் போகும். உங்களின் ஆளுமை திறன் அதிகரிக்கும். உங்கள் கருத்து குடும்ப உறுப்பினர்கள் விரும்ப மாட்டார்கள். பணி இடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். பொழுதுபோக்குக்காக அதிக நேரம் செலவிடுகிறது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்கள், அனுபவம் வாய்ந்தவர்களிடம் இருந்து உங்களுக்கு சிறப்பான ஆலோசனை கிடைக்கும். உங்களின் குடும்ப நலன் பேண முயற்சி செய்வீர்கள். வேலை மற்றும் வணிகம் தொடர்பான முயற்சிகள் லாபத்தை தரும். அன்றாட செலவுகளை சமாளிக்க அதிக பணம் செலவிடுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சோம்பேறித்தனமான மனநிலை இருக்கும். அதனால் உங்கள் வேலை தள்ளிப் போகலாம். சில முக்கிய வேலைகளை முடிக்க முடியாமல் போகும். இன்று உங்கள் வீட்டில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் கண்ணும் கருத்துமாக செயல்படவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம் மேம்படும். உங்கள் எரிச்சலான மன உணர்வால் பிறருக்கு தொந்தரவு ஏற்படும். வீட்டிலும், பணியிடத்திலும் அனுசரித்து சொல்லவும். இன்று பிறரிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உங்களின் விடாமுயற்சிக்கான பலனும், லாபமும் குறைவாக கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களின் அன்பு ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் செயல்பாட்டால் சமூகத்தில் மரியாதை குறைய வாய்ப்பு உண்டு. ஆன்மீகத்தில், சமூக சேவையில் ஆர்வம் காட்டவும். உங்கள் வேலை தொடர்பான முயற்சிகள் நன்மை தரும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பிடிவாதம் அதிகமாக இருக்கும். உங்கள் கருத்தை தெளிவாக கூற முடியாத சூழல் இருக்கும். பிறரை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். பணிவிடத்திலும், குடும்பத்திலும் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பணவரவு ஓரளவு இருக்கும். குடும்ப பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற முயலவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனம் சற்று சோகமாக இருக்கும். குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் போகலாம். உங்கள் மனம் சோகமாக இருக்கும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று சில முக்கிய வேலைகளை முடிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்களின் முதலீடுகள் எதிர்காலத்தில் லாபத்தை தரக்கூடியதாக இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று காதல் மற்ற நாளாக இருக்கும். உங்கள் குடும்பத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். பணியிடத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்கள் தொழிலில் திடீர் லாபம் அதிகரிக்கும். சொந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இன்று எதிலும் பொறுமை தேவை.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பெரும்பாலான நேரம் சோம்பேறித்தனமாக கழிப்பீர்கள். உடல் நலன் சிறப்பாக இருக்கும். பண ஆதாயம் கிடைக்கக்கூடிய நாள். இன்று உங்கள் வேலைகளை தள்ளிப் போடுவதை தவிர்க்கவும். கலைத்துறை, எழுத்துத் துறையில் உள்ளவர்கள் சிறப்பான நன்மை பெறலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் கவனம் வேலையில் செலுத்துவது அவசியம். இன்று வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று தர்ம உணர்வு அதிகரிக்கும். கடந்த கால கடின உழைப்பிற்கான நற்பலனை பெறுவீர்கள். இன்று எதிர்காலம் குறித்து அதிக யோசனை ஏற்படும். சமூகத்தில் மூத்தவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வார்த்தையில் அதிக கவனம் செலுத்தவும். விளையாட்டுத்தனமாக செயல்பட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களின் அற்புதமான செயலுக்கு பாராட்டு கிடைக்கும். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொழுதுபோக்கில் கவனம் செலுத்துவீர்கள்.