இன்றைய ராசிபலன் 29.04.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 16, செவ்வாய்க் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி, துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியம் மேம்படும். கூடுதல் வருமானத்திற்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களின் செயல்பாடு புகழை அதிகரிக்கும். எதிர்ப்பாலினத்தவர்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி ஆதரவாகவும், உதவிகரமாகவும் இருப்பார். சமூக மற்றும் ஆன்மீக நிகழ்வுகளுக்கு சாதகமான நாள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சில பிரச்சினைகளால் மனம் மகிழ்ச்சி குறையும். சில தவிர்க்க முடியாத செலவுகளால் நிதி நிலை சிரமத்தை சந்திக்க வாய்ப்பு உண்டு. சிலர் உங்களை தவறாக வழி நடத்த வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திருமண வாழ்க்கையில், மன நிம்மதியும் கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டில் பதட்டமான சூழ்நிலை உங்கள் கோபத்தை அதிகரிக்கும். உணர்ச்சி வசப்படுவதும், மோசமான சூழ்நிலைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. நிதி நிலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். உங்களின் புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும் அதிகரிக்கும். காதல் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் வேலையில் சவால்கள் நிறைந்திருக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களுடன் தவறான புரிதல் ஏற்படும். இன்று எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் அதன் இரு பக்கங்களையும் சமநிலையோடு சிந்திக்கவும். எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன் மிகவும் எச்சரிக்கையாக செயல்படவும். சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் அழகான தருணங்கள் அமையும். உங்கள் செயல்பாடுகளில் நிதானம் அவசியம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று முதலிடத்தில் தங்கள் குறித்து முழுமையாக அறிய முயற்சி செய்யுங்கள். எந்த ஒரு முடிவு, நடவடிக்கை எடுப்பதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. வேலை தொடர்பாக மன அழுத்த ஏற்படும். உதவி நாடுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்பட்டு செயல்பட வேண்டாம். இன்று சிலர் முக்கியமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். புதிய புதிய நிதி ஆதாயங்கள் உருவாகும். வீட்டில் யாரையும் கட்டாயப்படுத்தி சில செயல்களை செய்ய விட வேண்டும். தொழில் தொடர்பாக உங்கள் திறமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் துறையில் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்கால கவலையை விடுத்து நிகழ் காலத்தை அனுபவிக்க சிந்தித்து செயல்படவும்.இன்று உங்கள் பேச்சு மற்றும் செயலில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். இல்லையெனில் பின்னர் வருத்தப்பட நேரிடும். சில பிரபலங்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கும். திடீர் பயணங்கள் மன அழுத்தத்தை தர வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நம்பிக்கையுடன் எதிலும் செயல்படவும். இன்று உங்கள் மனதில் தேவையற்ற பயம், பொறாமை, வெறுப்பு போன்ற எதிர்மறையான உணர்ச்சிகள் ஏற்படும். எதிர்கால திட்டங்கள் குறித்து ஆழமாக சிந்திப்பீர்கள். துணையின் கோரிக்கைகள் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய செயல்கள் சிறப்பான வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். காதல் விஷயத்தில் இனிமையான தருணங்கள் அமையும். இன்று உங்கள் மனதளவில் ஆற்றல் நிறைந்ததாக உணர்வீர்கள். பயணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் மோசமான சூழல் இருக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் படிப்பு தொடர்பாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய வருமானம் கிடைப்பதற்கான சூழல் இருக்கும். இன்று உங்களின் கடினமான அணுகுமுறை குடும்பத்திலும், பணியிடத்திலும் சிக்கலை தருவதாக இருக்கும். மனதில் புதிய வருமானத்தை ஈட்டுவதற்கான யோசனைகள் உருவாகும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சில முடிவுகள் மற்றும் செயல்பாடு குடும்பம், நண்பர்களுக்கு எதிராக இருக்கும். இது வருங்காலத்தில் சில பிரச்சனைகளை தரும். இன்று உங்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். வாழ்க்கைத் துணையுடன் சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும் உங்களின் அவசர முடிவுகளால் பின்னர் வருத்தப்பட வாய்ப்பு உண்டு.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகமாக மனநிலை இருக்கும். இது உங்களின் நிதி நன்மைகளை அதிகரிக்கும். உங்கள் காதல் துணையை சந்திப்பது உற்சாகத்தை அதிகரிக்கும். உத்தியோகத்தில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இன்று பெரும்பாலான நேரம் வேடிக்கைக்காகச் செலவிடுகிறீர்கள். திருமண வாழ்க்கையில் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படவும்.