ஐ.நா. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மே முதல் வாரத்தில் வியட்நாமுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐ.நா. வெசாக் தின நிகழ்வுகள் மே 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை மியன்மாரின் ஹோ சி மின் நகரில் நடைபெறுகின்றது.85 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 2 ஆயிரத்து 700 விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை, இந்தியா, கம்போடியா, நேபாளம், லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே ஐ.நா. வெசாக் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.