இன்றைய ராசிபலன் 30.04.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 17, புதன் கிழமை, சந்திரன் ரிஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சுவாதி, விசாகம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலைப்பளு காரணமாக மன அழுத்தம், எரிச்சலான மனநிலை ஏற்படும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் லாபத்தை தரும். இன்று உண்மையான அன்பை கண்டுபிடிப்பதில் ஏற்படும். காதல் விஷயத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். இன்று இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மனதளவில் ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள். புத்திசாலித்தனமான முதலீடுகள் சிறப்பான லாபத்தை தரும். உங்களின் கடின உழைப்பால் பண லாபம் அதிகரிக்கும். குழந்தையின் ஆரோக்கியம் தொடர்பாக கவலை ஏற்படும். காதல் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இன்று பிறரின் மனதை புண்படுத்த வேண்டாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வேலை பளு காரணமாக மனதளவில் பதற்றமும், எரிச்சலும் அதிகரிக்கும். பணியிடத்தில் பிறரின் ஒத்துழைப்பு சரியாக கிடைக்காது. பிறருடன் உறவை பேணும் முயற்சி செய்யவும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். உங்கள் கருத்தை தெரிவிக்கும் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வாழ்க்கை தொடர்பாக மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மற்றவர்களின் பேச்சைக் கேட்டு முடிவு எடுப்பது, முதலீடு செய்வதை தவிர்ப்பது அவசியம். இல்லையெனில் நிதி நெருக்கடி ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பணம் தொடர்பான வாக்குவாதம் ஏற்படும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு வேலையை தொடங்குவதற்கு முன் விநாயகர் வழிபாடும், வீட்டின் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி செல்வதும் நல்லது. உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்கள் தான் அனுசரித்துச் செல்லவும். உங்கள் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடு, மனப்பதற்றம் உங்களை அமைதியற்றவர்களாக மாற்ற வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு நிறைய பணம் தேவைப்படும். இன்று பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மன அழுத்தம் நீங்கி, மன அமைதி ஏற்படும். பயணங்கள் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. விலைமதிப்பற்ற பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டிய நாள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான உறவு இருக்கும். முன்னர் நீங்கள் செய்த கடின உழைப்பிற்கான சிறப்பான பலனை பெறுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருந்தாலும், அனைத்து வேலைகளையும் சிறப்பாக முடிக்க கூடிய உடல்நலம் இருக்கும். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். குடும்பத்தினருடன் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் சூழல் சாதகமாக இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். தொழில் செய்யக்கூடியவர்கள் நலம் விரும்புகிறேன் ஆலோசனை பெறுவீர்கள். நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்தாலும் அதை சிறப்பாக சமாளிப்பீர்கள். இன்று உங்கள் பேச்சு, செயலில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கையில் பதட்டமாக சூழல் இருக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு திருமண வரன் அமையும். இன்று காதல் திருமண வாய்ப்புகள் உண்டு. உங்களின் நிலுவையில் உள்ள பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். இன்று விட்டுக் கொடுத்துச் சென்றால் வீட்டில் இணக்கமான சூழல் இருக்கும். வண்டி வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் அக்கறை செலுத்தவும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்படும். தேவையற்ற பயம், பதற்றம் காரணமாக மன அழுத்தமான சூழ்நிலை உணர்வீர்கள். கடினமான நேரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நம்பிக்கையுடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி உண்டாகும். உங்கள் பேச்சு, செயலில் நிதானத்தையும், எந்த ஒரு செயலிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் முக்கியமான வேலைகளை முடிக்க நேரத்தை ஒழிப்பீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.