அட்சய திருதியை நாளான இன்று (30) தங்கத்தினுடைய விலையில் மாற்றம் இல்லாமல், நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருவதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 244,000 ரூபாவாகவும்,
18 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 33,250 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 30,500 ரூபாவாகவும்,
18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.