Thursday, May 1, 2025
Homeஇந்தியாஅடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்" - பாகிஸ்தான் அமைச்சர்

அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்” – பாகிஸ்தான் அமைச்சர்

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று ராணுவ தளபதிகளுடம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்தார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலைத் திட்டமிடுவதாக தங்கள் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து இந்தியா ஜோடிக்கப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், ராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இந்தக் கூற்றுக்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான் என்றும், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான நிபுணர் ஆணையம் மூலம் நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக கூறியபோதிலும், இந்தியா மோதல் பாதையைத் தேர்வு செய்கிறது என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:  தீ விபத்து வதந்தியால் ரயிலில் இருந்து குதித்த பயணிகள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!